குடிநீர் குழாய் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்


குடிநீர் குழாய் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்
x

குடிநீர் குழாய் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக விருதுநகர் யூனியன் கூட்டத்தில் புகார் கூறப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் தலைவர் சுமதிராஜசேகர் தலைமையில் கூட்டரங்கில் நடைபெற்றது. துணைத்தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, போத்திராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் பலர் தங்கள் பகுதியில் நடக்கும் திட்டப்பணிகள் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். 9-வது வார்டு உறுப்பினர் சரோஜாமாதவன் தனது வார்டு பகுதி பாவாலி மற்றும் கூரைக்குண்டு பஞ்சாயத்துகளில் உள்ள நிலையில் குடிநீர் குழாய் இணைப்புக்கு ரூ. 10ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாக புகார் கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவர் சுமதி ராஜசேகர் உறுதி கூறினார். தொடர்ந்து 45 தீர்மானங்கள் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது.


Next Story