மயானத்திற்கு செல்ல பாதை வசதி... நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு கறி விருந்துடன் பாராட்டு விழா


மயானத்திற்கு செல்ல பாதை வசதி... நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு கறி விருந்துடன் பாராட்டு விழா
x

மயானத்திற்கு செல்ல பாதை வசதிக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு கறி விருந்துடன் பாராட்டு விழா நடைபெற்றது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையம் பகுதியின் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு மயானத்திற்கு செல்ல வசதி இல்லாததால் பல தலைமுறைகளாக ஓடை வழியாக சென்று, உடலை கிராம மக்கள் அடக்கம் செய்து வந்தனர்.

இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான தங்கமணி தலைமையில் மயானத்திற்கு செல்லும் வழித்தடத்திற்காக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து மயானத்திற்கு செல்ல விவசாயிகள் வழிதடம் வழங்க முன் வந்தனர்.

இதையடுத்து இடம் வழங்கிய விவசாயிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கறி விருந்து உடன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

50ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளதற்கு கிராம மக்கள், விவசாயிகளுக்கும் எம்எல்ஏ தங்கமணிக்கும், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

1 More update

Next Story