இடப்பிரச்சினையில் கோஷ்டி மோதல்


இடப்பிரச்சினையில் கோஷ்டி மோதல்
x

இடப்பிரச்சினையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் தெற்கு தெருவில் வசித்து வருபவர் சாமிதுரை(வயது 58). இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் சுந்தரேசன்(60). இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே திடீரென ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாமிதுரை மற்றும் சுந்தரேசன் ஆகியோர் தா.பழூர் போலீசில் தனித்தனியாக கொடுத்த புகாரை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, சாமிதுரை கொடுத்த புகாரின் பேரில் சுந்தரேசன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த சுப்பிரமணியன், அரவிந்தன் ஆகியோர் மீதும், சுந்தரேசன் கொடுத்த புகாரின் பேரில் சாமிதுரை மற்றும் வானதிரையன்பட்டினம் கிராமத்தை சேர்ந்த அவரது உறவினர் பாஸ்கர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story