நியாயவிலைக்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு - கூட்டுறவுத்துறை எச்சரிக்கை


நியாயவிலைக்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு - கூட்டுறவுத்துறை எச்சரிக்கை
x

கோப்புப்படம்

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை எச்சரித்துள்ளது.

சென்னை,

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக்கடை பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அத்தியாவசியப் பொருள்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

மேலும் வருகிற 13-ம் தேதி நியாயவிலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் இதையொட்டி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், போராட்டத்தின் போது பொதுமக்கள் பாதிக்காதவாறு இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு "NO WORK NO PAY" என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story