திருச்சி மத்திய சிறை அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடக்கம்


திருச்சி மத்திய சிறை அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடக்கம்
x

திருச்சி மத்திய சிறை அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி:

திருச்சி மத்திய சிறை அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் திருமுருகன். இவர் திருச்சி சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில் தனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் தனது நண்பர் வட்டாரத்தில் உள்ளவர்களிடம், தான் பணம் கடன் கேட்பது போல் அந்த மர்ம நபர் கேட்டுவருவதாகவும், எனவே அந்த போலி முகநூல் கணக்கை முடக்கி உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியுள்ளார். இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story