மாணவிகள் விடுதிக்கு மின்விசிறிகள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்


மாணவிகள் விடுதிக்கு மின்விசிறிகள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
x

மாணவிகள் விடுதிக்கு மின்விசிறிகள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது.

வேலூர்

மாணவிகள் விடுதிக்கு மின்விசிறிகள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைபிரிவு போலீசார் கடந்த மாதம் வேலூர் தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி, கல்லூரி மாணவிகள் விடுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது மாணவிகளின் குறைகள் மற்றும் தேவைகள் குறித்து தனித்தனியாக கேட்டறிந்து, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் காவல்துறை மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் அந்த மாணவிகள் விடுதிக்கு 12 மின்விசிறிகள், 10 டியூப் லைட்டுகள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கி மாணவிகளிடம் அவற்றை வழங்கினார். இதில் மனித உரிமைப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு இருதயராஜ் மற்றும் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் விடுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


Next Story