நிலத்தகராறில் விவசாயிக்கு கொடுவாள் வெட்டு


நிலத்தகராறில் விவசாயிக்கு கொடுவாள் வெட்டு
x
தினத்தந்தி 5 May 2023 7:00 PM GMT (Updated: 5 May 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் வத்தல்மலை ஒன்றிக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55). விவசாயி. இவருடைய தம்பி ரங்கன் (50). கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் 2 பேருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று கோவிந்தன் தனது நிலத்தில் ஏர் ஓட்டி கொண்டிருந்தார். அப்போது ரங்கன் தனது பாகத்தை கொடுக்காமல் ஓட்டகூடாது என கூறி தகாத வார்த்தையால் திட்டி அண்ணன் கோவிந்தனை கொடுவாளால் தலையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தனை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரப்பன் கொடுவாளால் வெட்டிய ரங்கன் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ளவரை தேடி வருகிறார்.


Next Story