சாராயம் தயாரிக்க வயலில் ஊறல் போட்ட விவசாயி கைது


சாராயம் தயாரிக்க வயலில் ஊறல் போட்ட விவசாயி கைது
x

சாராயம் தயாரிக்க வயலில் ஊறல் போட்ட விவசாயி கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது குன்னம் தாலுகா, புதுவேட்டக்குடி வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (வயது 59) தனது வயலில் சாராயம் தயாரிக்க ஊறல் போட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செல்வராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 30 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார், அதனை அதே இடத்தில் தரையில் ஊற்றி அழித்தனர்.


Next Story