விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 15 Oct 2023 7:15 PM GMT (Updated: 15 Oct 2023 7:15 PM GMT)

கிணத்துக்கடவு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்


கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துக் கவுண்டனூரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 65). விவசாயி. இவரது மனைவி ஜெயமணி (56). தேவராஜுக்கு குடிப்பழக்கம் உண்டு, இந்தநிலையில் தேவராஜ்க்கு சொந்தமான இடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்கப்பட்டு உள்ளது. தேவராஜ் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவி ஜெயமணியிடம் நிலத்தை வித்த பணத்தை கொடு இல்லையென்றால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த தேவராஜ் நிலம்விற்று கிடைத்த பணத்தை தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி அருகில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயமணி உறவினருக்கு தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். அங்கு டாக்டர்கள் தேவராஜ் உடலை பரிசோதனை செய்து பார்த்ததில் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story