விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் அருகே கோபுராஜபுரம் கிராமத்தில் ராயர் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 34). விவசாயி. இவரது மனைவி கயல்விழி, தனது குழந்தைகளுடன் திருவையாறு கோவில் நிகழ்ச்சிக்காக உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனால் மனம் உடைந்த ராமலிங்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிமருந்தை(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கயல்விழி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story