ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.32 லட்சம் கேட்டு மிரட்டல்: விவசாயி, விஷம் குடித்து தற்கொலை வேப்பூர் அருகே பரிதாபம்


ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.32 லட்சம் கேட்டு மிரட்டல்:    விவசாயி, விஷம் குடித்து தற்கொலை    வேப்பூர் அருகே பரிதாபம்
x

வேப்பூர் அருகே ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.32 லட்சம் கேட்டு மிரட்டியதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

வேப்பூர்,

விவசாயி

வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜ்குமார் (வயது 39), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை விஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மிரட்டல்

விசாரணையில் ராஜ்குமார், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.5 லட்சமும், அடரிகளத்தூரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.2 லட்சமும் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்திய பிறகும் அந்த பெண் தனக்கு ரூ.32 லட்சமும், அந்த நபர் ரூ.8 லட்சமும் தரவேண்டும் என்று கூறி ராஜ்குமாரை ஆபாசமாக திட்டி மிரட்டியதும், அதில் மனமுடைந்த ராஜ்குமார் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story