விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை
கறம்பக்குடி அருகே உள்ள கூகை புலையான் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 52). விவசாயி. இவரது மனைவி மேனகா. இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பாலசுப்பிரமணியன் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ராஜ்குமார் மழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story