விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Jun 2023 3:45 AM IST (Updated: 24 Jun 2023 4:51 PM IST)
t-max-icont-min-icon

தீராத வயிற்று வலியால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே கடைகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 46). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். ராஜ்குமார் கடந்த ஓராண்டாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்டு விட்டு. தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலை அவரது மனைவி சோனியா கணவரின் அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து ராஜ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story