தனியார் பஸ் மோதி விவசாயி சாவு
தனியார் பஸ் மோதி விவசாயி இறந்தார்.
திருச்சி
சமயபுரம், ஆக.20-
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வலையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்தையா (வயது 55). விவசாயியான இவர் நேற்று திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பின்னர் வேலை முடிந்தவுடன் வலையூறுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ராசாம்பாளையம் தெற்கு சாலக்காடு அருகே உள்ள அரசமரம் என்ற இடம் அருகே சென்ற போது திருச்சியில் இருந்து எதுமலை நோக்கி சென்ற தனியார் பஸ் முத்தையா மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவர் லால்குடி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மனோஜ்குமார் (34) என்பவரை கைது செய்தார்.
Related Tags :
Next Story