தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி


தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
x

திருத்துறைப்பூண்டி அருகே தனியார் பஸ்சில் இருந்துதவறி விழுந்து விவசாயி உயிாிழந்தார்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் சுராஜ்முகமது(வயது58). விவசாயியான இவர் கட்டி மேட்டிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்வதற்காக வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் ஏறினார்.கட்டி மேடு பகுதி வளைவில் பஸ் திரும்பிய போது பஸ்சின் பின்பக்க படியில் நின்று கொண்டிருந்த சுராஜ்முகமது மற்றும் கண்டக்டர் பிரசன்னா ஆகிய இருவரும் பஸ்சில் இருந்து வெளியே சென்று விழுந்தனர். இதில் சுராஜ் முகமதுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கண்டக்டா் பிரசன்னாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பாிசோதனை செய்த டாக்டர்கள் சுராஜ்முகமது உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். கண்டக்டர் பிரசன்னா உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிைரவர் வருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story