பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
பாலக்கோடு:
விவசாயி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஊமையன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35), விவசாயி. இவருடைய மனைவி ரேவதி (32). இவர்களுக்கு பிரவின்குமார் (14) என்ற மகனும், தனஸ்ரீ (10) என்ற மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை கோவிந்தராஜ் தனது குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது சுவரில் இருந்த மின்சார மீட்டர் மீது எதிர்பாராத விதமாக கை வைத்துள்ளார். உடனே மின்சாரம் தாக்கியதில் அலறியபடி கீழே விழுந்து மயக்கம் அடைந்தார்.
சாவு
அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.