மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி


மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
x

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்

திருச்சி

உப்பிலியபுரம் அண்ணாசிலை கிழக்கு வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 50), விவசாயி. இவருக்கு சுதா என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று மாலையில் ரஞ்சித் தோட்டத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்க சென்றார். அப்போது, மின்பெட்டியின் சாவியை தொலைத்து விட்டதால், பூட்டிய மின்பெட்டியின் உள்ளே வெறும் கையால் மின்பொத்தனை இயக்க முயற்சித்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்து ரஞ்சித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ரஞ்சித் உப்பிலியபுரம் 3-வது வார்டு தி.மு.க. உறுப்பினராக உள்ளார்.


Next Story