உப்புக்கோட்டை அருகே கழுத்தை அறுத்து விவசாயி படுகொலை


உப்புக்கோட்டை அருகே கழுத்தை அறுத்து விவசாயி படுகொலை
x

உப்புக்கோட்டை அருகே கேலி செய்ததால் கழுத்தை அறுத்து விவசாயியை படுகொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்

தேனி

கழுத்தை அறுத்து கொலை

தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகே உள்ள கூழையனூர் மெயின் தெருவை சேர்ந்தவர் தவசி (வயது 56). விவசாயி. அதே ஊரில் வசித்து வருபவர் பிரபு (26). ஆட்டோ டிரைவர். இவர்கள் இருவரும் தேனி-குச்சனூர் சாலையில் பஸ் நிறுத்தம் அருகே நின்று இன்று மாலை பேசி கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடைேய வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் தகராறாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த பிரபு ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து தவசியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த தவசி, சாகும் வரை அங்கேயே நின்ற பிரபு அவர் இறந்த பின் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

கைது-வாக்குமூலம்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிரபுவை தேடி வந்தனர். இதற்கிடையே பிரபு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இன்று மாலை இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது பிரபுவை, தவசி கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தவசியின் கழுத்தை அறுத்து கொன்றதாக போலீசார் கூறினர். கேலி செய்ததால் விவசாயியை கழுத்தை அறுத்து ஆட்டோ டிரைவர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story