பஸ் மோதி விவசாயி பலி


பஸ் மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே பஸ் மோதி விவசாயி பலியானாா்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்:

ரிஷிவந்தியம் அடுத்த லாலாபேட்டையை சேர்ந்தவர் குப்புசாமி மகன் சுந்தரபாண்டியன்(வயது 25). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் கீழத்தேனூரில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். கீழத்தேனூர் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் சுந்தரபாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சுந்தரபாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான அய்யனார்பாளையத்தை சேர்ந்த நீலகண்டன் மகன் சக்திவேல் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story