டிராக்டர் மோதி விவசாயி பலி


டிராக்டர் மோதி விவசாயி பலி
x

கடையம் அருகே டிராக்டர் மோதி விவசாயி பலியானார்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள காக்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது 55). விவசாயியான இவர் தனது மோட்டார் சைக்கிளில் பாபநாசம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

ஆம்பூர் ரெயில்வே கேட் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த டிராக்டரும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே தங்கப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story