வாகனம் மோதி விவசாயி பலி


வாகனம் மோதி விவசாயி பலி
x

வாகனம் மோதி விவசாயி பலி யானார்.

திருச்சி

மணப்பாறை முத்துடையான்பட்டி பகுதியை சேர்ந்தவர் இன்னாசிமுத்து(வயது 50). விவசாயி. சம்பவத்தன்று இன்னாசிமுத்து திருச்சி - மதுரை பைபாஸ் ரோடு பஞ்சப்பூா் பகுதியில் உள்ள ஒரு கார் நிறுவனத்தின் எதிரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று இன்னாசிமுத்து ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர்படுகாயமடைந்தார். உடனே அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story