மக்காச்சோளம் நடவுப்பணியில் விவசாயிகள் மும்முரம்


மக்காச்சோளம் நடவுப்பணியில் விவசாயிகள் மும்முரம்
x

வத்திராயிருப்பு பகுதிகளில் மக்காச்சோளம் நடவுப்பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பகுதிகளில் மக்காச்சோளம் நடவுப்பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மக்காச்சோளம் சாகுபடி

வத்திராயிருப்பு, சேசபுரம், வ.மீனாட்சிபுரம், சுந்தரபாண்டியம், அகத்தாப்பட்டி, தைலாபுரம், இலந்தைகுளம், கோட்டையூர், துலுக்கப்பட்டி, நத்தம்பட்டி, மகாராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பருத்திக்கு அடுத்தபடியாக மக்காச்சோளத்தை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக கிணறுகளில் தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தற்போது மக்காச்சோளம் நடவு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

மானியத்தில் விதைகள்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு பகுதிகளில் உள்ள விவசாயிகள் தற்போது மக்காச்சோளத்தை சாகுபடி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு தொடர்ந்து மழை பெய்ததால் பாசனத்திற்கு தேவையான அளவு தண்ணீர் இருக்கும் என்ற நம்பிக்கையில் சாகுபடி பணியை தொடங்கி விட்டோம்.

மக்காச்சோளம் விதையினை மானியத்தில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் எண்ணற்ற விவசாயிகள் பயன்பெறுவர். மேலும் மக்காச்சோளத்தில் ஏற்படும் படைப்புழு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை தடுப்பதற்கு அரசு விவசாயிகளுக்கு விதையினை தேர்வு செய்து பரிந்துரை செய்தால் தேவையற்ற மகசூல் இழப்பினை தடுக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story