திருத்தணி ஒன்றியத்தில் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
திருத்தணி ஒன்றியத்தில் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் ஊராட்சியில் பெரிய ஏரி அமைந்துள்ளது. 24.01 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த ஏரியின் மூலம் எஸ்.அக்ரஹாரம், குடிகுண்டா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான விவசாயிகளின் 70.92 ஹெக்டர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடா் நீா்வரத்தால் ஏரி நிரம்பி, உபரிநீா் வெளியேறியது. இந்த ஏரி நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story