தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி


தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
x

தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி சாகுபடி

வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜய ரங்கபுரம், சுப்ரமணியபுரம், பேர்நாயக்கன்பட்டி, மடத்துப்பட்டி, ஏழாயிரம்பண்ணை, எட்டக்காபட்டி, செவல்பட்டி, அன்னபூரணியாபுரம், கொட்டமடக்கிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆப்பிள் வகையை சேர்ந்த தக்காளி அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து முகூர்த்தம் காரணமாகவும், மாசிதிருவிழாவை முன்னிட்டு தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விலை உயர்வு

இதுகுறித்து சுப்பிரமணியபுரம் விவசாயி ராஜ்மோகன் கூறியதாவது:-

வெம்பக்கோட்டை பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை ஆப்பிள் வகை தக்காளி கிலோ ரூ.10-க்கு மட்டுமே விற்பனையானது. தற்போது தொடர்ந்து முகூர்த்தம் காரணமாகவும், கோவில் விழாக்கள் தொடா்து நடைபெற்று வருவதால் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் தற்போது தக்காளி கிலோ ரூ.20 ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.


Next Story