பச்சை தேயிலைக்கு உரிய விலை நிர்ணயிக்க கோரி12-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்


பச்சை தேயிலைக்கு உரிய விலை நிர்ணயிக்க கோரி12-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
x

பச்சை தேயிலைக்கு உரிய விலை நிர்ணயிக்க கோரி 12-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு உரிய விலை நிர்ணயிக்க கோரியும், தேயிலைக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்வது சம்பந்தமான சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாக்குபெட்டா படுகர் நல சங்கத்தின் சார்பில் கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் கடந்த 1-ந்தேதி முதல் பொரங்காடு சீமை படுகர் நலச்சங்கம் தலைவர் தியாகராஜன் தலைமையில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தின் 12-வது நாளான நேற்று திம்பட்டி, கடக்கோடு, மேல் அனையட்டி, கீழ் அனையட்டி, தாலோரை, உபதலை கிராமத்தில் இருந்து விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் கோத்தகிரி முன்னாள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் புஷ்பராஜ், செயலாளர் வகாப், பொருளாளர் முரளி உள்பட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதேபோல் ஊட்டி அருகே உள்ள பாலகொலா, குந்தசப்பை கிராமங்களிலும் இதேகோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story