கள் இறக்க அனுமதி கேட்டு விவசாயிகள் போராட்டம்


கள் இறக்க அனுமதி கேட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 29 July 2023 1:45 AM IST (Updated: 29 July 2023 1:46 AM IST)
t-max-icont-min-icon

கள் இறக்க அனுமதி கேட்டு பச்சார்பாளையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்


சுல்தான்பேட்டை


கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். உரித்த தேங்காயை கிலோ ரூ.50-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக் கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பச்சார்பாளையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.


24-வது நாளான நேற்று விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, நெற்றியில் நாமம் போட்டு போராட்டம் நடத்தினர்.


இதில், கோவை மாவட்ட செயலாளர் வேலு.மந்தராசலம், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் குடிமங்கலம் செந்தில் குமார், பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வக் குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகளின் தொடர் காத்திருப்பு போராட்டம் நாளை (ஞாயிற்றுகிழமை) முடிவுக்கு வருவதாக சங்கத்தின் நிறுவன தலைவர் வக்கீல் ஈசன் முருகசாமி தெரிவித்தார்.



Next Story