மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் கைது


மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் கைது
x

ஜெயங்கொண்டத்தில் மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக மாவட்ட செயலாளர் மணிவேல், செந்தில்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தீர்மானிக்கப்படவில்லை. பட்ஜெட்டில் உரமானியம் குறைத்தல், உணவு மானியம் குறைத்தல், நூறு நாள் வேலை திட்டத்தில் வெறும் ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியது. விவசாயிகள் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான எந்தவித அறிவிப்பையும் வெளியிடாததை கண்டித்து பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர். அப்போது பட்ஜெட்டின் நகலை எரிக்க முயற்சித்த போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பட்ஜெட் நகலை எரிக்க முயற்சித்த 2 பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.


Next Story