தோகைமலையில், விவசாய சங்க மாநாடு
தோகைமலையில், விவசாய சங்க மாநாடு நடந்தது.
கரூர்
தோகைமலையில் விவசாய சங்க மாநாடு நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு நிர்வாகி அழகேசன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். காவிரி ஆற்றில் இருந்து கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை மாயனூரில் இருந்து பஞ்சப்பட்டி வழியாக தோகைமலை பகுதிகளில் பாசன குளங்களில் நிரப்ப வேண்டும், கழுகூரில் பகுதியில் அமைக்கப்பட்ட பகுதி நேர ரேஷன் கடை உடனடியாக திறக்க வேண்டும், கழுகூர், சின்னயம்பாளையம் ஊராட்சிகளை மையமாக கொண்டு கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story