விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பனவடலிசத்திரம் அருகே விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி
பனவடலிசத்திரம்:
தேவர்குளம், வன்னிக்கோனேந்தல், அச்சம்பட்டி, நரிக்குடி, மூவிருந்தாளி, வெள்ளப்பனேரி, மேலஇலந்தைகுளம், சுண்டங்குறிச்சி, தடியம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் போதிய மழை இல்லாமலும், கிணறு. தோட்டங்களில் நீர் ஆதாரம் இல்லாமலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. எனவே இப்பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னிக்கோனேந்தல் வருவாய் குறுவட்ட அலுவலக வளாகம் அருகில நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். விவசாயிகள் மேம்பாட்டு சங்க அமைப்பாளர் சீனி முத்தையா வரவேற்றார். இதில் திரளாக விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story