போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x

நேரடி நெல் விதைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை
நேரடி நெல் விதைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நேரடி நெல் விதைப்புக்கு எதிர்ப்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மேலபருத்திக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 27-ந்தேதி விவசாய தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தடுத்த போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அன்று மாலையே விடுதலை செய்தனர்.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் நேரடி நெல் விதைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வயலில் இறங்கி போராட்டம் நடத்தியவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர் பிரச்சினைக்கு சுமூக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் எந்த இடையூறுமின்றி தொடர்ந்து சாகுபடி பணிகள் செய்ய உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் நலச்சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷங்கள்

இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மயிலாடுதுறை மாவட்ட தலைவர் திருமுருகன், மாவட்ட செயலாளர் அய்யப்பன், நிர்வாகிகள் பழனிவேல், தனபால், காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோபிகணேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள ்எழுப்பினர்.


Next Story