வேளாண் அடுக்கு திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயனடையலாம்


வேளாண் அடுக்கு திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயனடையலாம்
x

வேளாண் அடுக்கு திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயனடையலாம் என்று தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குனர் சந்துரு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குனர் சந்துரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைத்து பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட கிராம நிர்வாக அலுவலகம், உதவி வேளாண்மை அலுவலகம் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலகத்தை விவசாயிகள் அணுகி ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண் விவரங்கள் மற்றும் நில உரிமை ஆவணங்களை கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பதிவேற்றம் செய்யும் விவசாயிகள் விவரம் கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் சேகரிக்கப்பட்டும். இதன் மூலம் வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, வேளாண் பொறியியல் துறை, உணவு வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண் விற்பனை, வணிகத் துறை, விதை சான்றளிப்புத் துறை, சர்க்கரைத் துறை ஆகிய துறைகளின் திட்டங்களில் விவசாயிகள் பயனடையலாம். மேலும் நிதி் திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடி பண பறிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும். எனவே வேளாண் அடுக்கு திட்டத்தில் தியாகதுருகம் வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story