தேங்காய் மதிப்பு கூட்டுதல் பொருட்கள் தயாரிக்கும் எந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்


தேங்காய் மதிப்பு கூட்டுதல் பொருட்கள் தயாரிக்கும் எந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்
x

பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தில் உள்ள தேங்காய் மதிப்புகூட்டுதல் பொருட்கள் தயாரிக்கும் எந்திரங்களை பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை துணை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்

தஞ்சாவூர்

தென்னை வணிக வளாகம்

தஞ்சை மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் வித்யா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன் கோட்டை உக்கடை கிராமத்தில் தென்னை வணிக வளாகம் உள்ளது. இங்கு 22 ஏக்கரில் சேமிப்பு கிடங்கு, கொப்பரை தரம் பிரிக்கும் பகுதி, எண்ணெய் பிழியும் ஆலை, சூரிய ஒளி களம், ஏல அரங்கம், 18 வகையான தேங்காய் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் நவீன எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பயன்படுத்திக்கொள்ளலாம்

மேற்காணும் தென்னை வணிக வளாக மதிப்பு கூட்டுதல் எந்திரங்களை விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) வரை தேதி குறிப்பிட்ட ஏலத்தில் பங்கு பெற்று பயன்பெறலாம். மேலும் ஏலம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள www.agrimark.tn.gov.in என்ற இணைய தளத்தை பார்வையிடலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story