திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு


திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு
x

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், ஆவடி சா.மு. நாசர் பங்கேற்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நேற்று திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பால்வளத்துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்கள்.

பின்னர் அமைச்சர்கள் ராமச்சந்திரன், ஆவடி சா.மு. நாசர் ஆகியோர் வனத்துறை சார்பாக தேவனேரி மற்றும் ஏரிக்குப்பம் கிராமங்களில் 6 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், திருவள்ளூர் வன கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வன உயிரினங்களால் ஏற்பட்ட சேதங்களுக்காக 7 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 75 மதிப்பீட்டில் இழப்பீட்டு தொகைக்கான ஆணைகளையும், விவசாயிகளுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சையத் முஜம்மில் அப்பாஸ், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி. ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, சுதர்சனம், சந்திரன், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ், கூடுதல் தலைமை வன பாதுகாவலர் முனைவர் நாகநாதன், மாவட்ட வன அலுவலர் ராம்மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், உதவி வன பாதுகாவலர் செசில் கில்பர்ட், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசன், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மலர்விழி மற்றும் வனத்துறை உயர் அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story