விவசாயிகள் ஆலோசனை கூட்டம்


விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
x

ராதாபுரத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் ராதாபுரம் தொகுதி விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் வால்டர் எட்வின், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஜார்ஜ், மாநில விவசாய அணி செயலாளர் வில்பிரட், அம்பை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராம்சிங், வள்ளியூர் நகர தலைவர் பொன்பாண்டி, சிதம்பராபுரம் பஞ்சாயத்து தலைவர் பேபி முருகன் உள்ளிட்டோர் பேசினர்.

கூட்டத்தில் ராதாபுரம் கால்வாயில் 16.6.2023 முதல் 31.10.2023 வரை வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பித்த முதல்-அமைச்சருக்கும், உறுதுணையாக இருந்த சபாநாயகருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அரசாணையின்படி தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும், தொடர்ந்து பணி தாமதமாகும் பட்சத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் என்.ஜி.ஓ. மாவட்ட தலைவர் வைகுண்டராஜன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story