நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம்


நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம்
x

நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம்

திருப்பத்தூர்

மணக்கால் ஊராட்சி புலவநல்லூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

நெல்கொள்முதல் நிலையம்

கொரடாச்சேரி அருகே மணக்கால் ஊராட்சி புலவநல்லூர் கிராமத்தில் கடந்த ஆண்டு முதல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த ஆண்டும் அந்த இடத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு விவசாயிகளும் அந்த இடத்தில் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக வைத்துள்ளனர்.

இந்தநிலையில் அந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த கருத்து வேற்றுமைகள் நிலவி வருகிறது. இதனால் அந்த இடத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையம் செயல்பாட்டிற்கு வராமல் நிறுத்தப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம்

இந்தநிலையில் நேற்று மணக்கால் ஊராட்சி புலவநல்லூர் கிராமத்தில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று கூறி அந்த பகுதி மக்கள், விவசாயிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதத்திற்கு மணக்கால் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சந்துரு தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஆறுமுகம், மணியன், அ.தி.மு.க.வை சேர்ந்த சந்துரு உள்ளிட்ட விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு ெநல்மூட்டைகளை வைத்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story