விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
x

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 30-ந்தேதி விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடக்கிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது.

கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, வங்கியாளர் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும், தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன்பெறலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story