28-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


28-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே, மாவட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story