விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x

திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26-ந்தேதி நடக்கிறது.

திருவாரூர்

அக்டோபர் மாதத்திற்கான திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணி முதல் 1.35 மணி வரை திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் வேளாண்மை- உழவர் நலத்துறை, வேளாண்மை சார்ந்த தோட்ட கலைத்துறை, வேளாண் விற்பனை-வணிகத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்ப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.


Next Story