திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்


திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர்

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்ட விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 151 மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

திருவள்ளுர் மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவ கனமழையில் சேதமடைந்ததைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிவாரண நிதி பெற வருவாய்த்துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து களஆய்வு செய்வதற்கு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து களஅளவில் பயிர்சேத பரப்பு கணக்கெடுப்புபணி நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விரைவாக இறுதியறிக்கை நிவாரண நிதி பெற அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

உழவன் கைபேசிசெயலி

வேளாண்மைதுறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அரசு அனைத்து வேளாண் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு விவசாயிகள் கட்டாயம் "உழவன் கைபேசிசெயலியில்"முன்பதிவு செய்யவேண்டும் என தமிழக அரசுஅறிவித்துள்ளது.

எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள், உரங்கள், வேளாண் இடுபொருட்கள், பண்ணை எந்திரங்கள், தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானியத்திட்டங்கள், விளைபொருட்கள் விற்பனை ஆகியவற்றை பெறுவதற்கு "உழவன்கைபேசிசெயலியில்" கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும்.

நலதிட்ட உதவிகள்

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 2 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தொடங்க நிதியாக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் பெறுவதற்கான ஆணைகளையும், உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் 6 விவசாயிகளுக்கு ரூ.6.77 லட்சம் மதிப்பீட்டிலான பயிர் கடன்களையும், வேளாண் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பாக 10 விவசாயிகளுக்கு ரூ.1.52 லட்சம் மதிப்பீட்டிலான வேளாண் இடுபொருள்களையும் வழங்கினார்.


Next Story