விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
x

நெல்லையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளார்கள். எனவே கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


Next Story