விவசாயிகள் குழு ஆலோசனை கூட்டம்


விவசாயிகள் குழு ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 16 Sept 2023 2:15 AM IST (Updated: 16 Sept 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டையில் விவசாயிகள் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை வட்டார அட்மா திட்ட விவசாயிகள் குழு மற்றும் தொழில்நுட்ப குழு கூட்டம், அங்குள்ள வேளாண் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு விவசாயிகள் குழு தலைவர் மந்தராசலம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வேளாண் அலுவலர் குருசாமி கலந்து கொண்டு வேளாண் துறையில் உள்ள திட்டங்கள் குறித்து விளக்கினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் ரமேஷ் கலந்துகொண்டு தோட்டக்கலை துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், மானியங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து கூட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் அட்மா தலைவர் செஞ்சேரிமலை மந்தராசலம், முன்னோடி விவசாயி செஞ்சேரி எம்.கே.முத்துமாணிக்கம் தலைமையில் கைத்தெளிப்பான், தார்பாய், கால்நடைகளுக்கு தாது உப்பு ஆகியவை பயனாளிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது. இதில் துணை வேளாண் அலுவலர் இருதயராஜ், அட்மா தொழில்நுட்ப மேலாளர் தனபிரியா, உதவி தொழில்நுட்ப மேலாளார் சிவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story