மாலை நேர விற்பனை தொடக்கம்


மாலை நேர விற்பனை தொடக்கம்
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் உழவர் சந்தையில் மாலை நேர விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில், முன்னோட்டமாக நேற்று முதல் மாலை நேர உழவர் சந்தை தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க நாளான நேற்று 10 கடைகள் வைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இந்த கடைகளில் பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வேளாண் பொருள் உற்பத்தியாளர்கள் விற்பனை செய்தனர். இந்த உழவர் சந்தையில் கருப்பட்டி, சுக்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு, நாட்டு சக்கரை, உப்பு, நொறுக்கு தீனிகள், கிழங்கு சிப்ஸ் வகைகள், சூப்பு, சுக்கு காபி, மூலிகை வடிநீர், சத்து மாவு, முளைகட்டிய பயிர் வகைகள், காய்கறிகள், பழங்கள் என வேளாண் மதிப்பு கூட்டிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாளில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இந்த மாலை நேர உழவர் சந்தையானது தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story