விவசாயிகள் மீண்டும் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்


விவசாயிகள் மீண்டும் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்
x

விவசாயிகள் மீண்டும் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

திருச்சி

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்க வேண்டும். டெல்டா விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 25-வது நாளாக அவர்களுடைய போராட்டம் நீடித்தது.

தினமும் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீண்டும் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு உள்பட 14 பேர் மாம்பழச்சாலை அருகே காவிரி ஆற்றில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி 14 பேரையும் கரைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து, அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story