கலெக்டரிடம் விவசாயிகள் மனு
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
சேலம்
தமிழக விவசாயிகள் சங்க (பால் வளம்) மாநில செயலாளர் பெரியண்ணன் தலைமையில் சிலர் பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஒரு லிட்டர் பால் ரூ.32-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் ரூ.40 முதல் ரூ.45 வரை கொள்முதல் செய்கின்றனர். இதனால் தமிழக பால் உற்பத்தியாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே ஒரு லிட்டர் பசும்பால் ரூ.42, எருமைப்பால் ரூ.55-க்கு கொள் முதல் செய்ய வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் விரைவில் ஆவின் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story