விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க கோரியும், 58 கிராம கால்வாய் தொட்டிப்பாலம் அருகே கல்குவாரி அமைக்க அனுமதி அளித்த அதிகாரிகளை கண்டித்தும், கால்வாய் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட விவசாயிகள், கால்வாய் பராமரிப்பு பணிகளை முடித்து 58 கிராம கால்வாயில் நீரை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story