நெல்லிக்குப்பத்தில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


நெல்லிக்குப்பத்தில்  கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லிக்குப்பத்தில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், எரிந்த கரும்புக்கு விவசாயிகளிடம் பிடித்தம் செய்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த கரும்பு ரகங்களை நடவு செய்தால் ஆலை நிர்வாகம் பதிவு செய்திட வேண்டும்.

2003-2004, 2008-2009 ஆம் ஆண்டுக்கான லாப பங்கு தொகை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சங்க செயலாளர் தென்னரசு தலைமை தாங்கினார். தலைவர் மணி, விவசாய சங்க தலைவர் சம்பத், பொருளாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் ரவீந்திரன், மாநில துணை செயலாளர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், தட்சணாமூர்த்தி, சரவணன், காந்தி, ராமலிங்கம், ஸ்ரீதர், லோகநாதன், ஜெகதீசன், கோவிந்தராஜ், ஜாகிர் உசேன், ராமானுஜம், திருமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story