திருவாரூரில், விவசாய தொழிலாளர்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில், விவசாய தொழிலாளர்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திருவாரூரில், விவசாய தொழிலாளர்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிக்கு காவிரி ஆணைய தலைவர் துணை போவதாக கூறி, அவரை கண்டித்து திருவாரூரில் விவசாய தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளர்கள் கட்சி தலைவரும், தமிழக கட்டிட தொழிலாளர் நலவாரிய தலைவருமான பொன்குமார் தலைமை தாங்கினார்.அப்போது அவர் கூறுகையில், 'தமிழக காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் 20 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி நீர் உள்ளது. விவசாயத்துக்கு உயிர் நீராக காவிரி நீர் உள்ளது. இந்த சூழலில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதற்கு காவிரி ஆணைய தலைவர் ஒத்துழைப்பு செய்து வருகிறார். அவரது இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்' என்றார். இதில் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன், செயலாளர் நேதாஜி, பொருளாளர் நடராஜன், இளைஞரணி நிர்வாகி கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story