உளுந்து, பயறு பயிர்க்காப்பீடு திட்ட முறைகேட்டை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்


உளுந்து, பயறு பயிர்க்காப்பீடு திட்ட முறைகேட்டை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
x

உளுந்து, பயறு பயிர்க்காப்பீட்டு திட்ட முறைகேட்டை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

உளுந்து, பயறு பயிர்க்காப்பீட்டு திட்ட முறைகேட்டை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முறைகேடு

2021-22-ம் ஆண்டுக்கான உளுந்து, பயறு வகை பயிர்களுக்கான பயிர்க்காப்பீடு திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறியும், அதை கண்டித்தும், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திருவீழிமிழலை தென்கரை கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜதுரை, ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கலியபெருமாள் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் சேகர், தமிழ்ச்செல்வி, நிர்வாகிகள் வீரபாண்டியன், ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, தாசில்தார் குருசாமி, வருவாய் ஆய்வாளர் செல்வி ஆகியோர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தினால் பூந்தோட்டம்- நாச்சியார்கோவில் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story