விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 March 2023 12:15 AM IST (Updated: 25 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

செஞ்சி:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செஞ்சி வட்டக்குழு சார்பில் செஞ்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க கோரியும், சிறு குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், 60 வயதான அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வுதியம் வழங்க கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செஞ்சி வட்டக்குழு தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி உரையாற்றினார். இதில் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சையத் உஸ்மான், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குண்டு ரெட்டியார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் செஞ்சி சிவா, திராவிடர் கழகம் கோபண்ணா, பெரியார் சாக்ரடீஸ், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் ஆல்பர்ட் வேளாங்கண்ணி, இந்திய தேசிய காங்கிரஸ் நகர தலைவர் சூரியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் சபாபதி நன்றி கூறினார்.

1 More update

Next Story