கவர்னரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கவர்னரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் பேரணியின் முடிவில் விவசாய சங்க தலைவர்கள் தமிழக கவர்னரை சந்திக்க சென்றனர். ஆனால் விவசாய சங்க தலைவர்களை சந்திக்க கவர்னர் மறுத்ததாக கூறப்படுகிறது. விவசாய சங்க தலைவர்களை சந்திக்க மறுத்த தமிழக கவர்னரை கண்டித்தும், கவர்னர் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தியும் நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் பெரம்பலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story